நாளை பணிப் பகிஷ்கரிப்பு



வரவு செலவுத் திட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பஸ் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிச்சயம் நடைபெறும் என, பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

எந்தவொரு காரணத்துக்காகவும் இதனை நிறுத்தப் போவதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கும் திட்டத்திற்கே இவர்கள் எதிர்ப்பு வௌியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.