ஆகம பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக கூறி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கிற்கு பிணை வழங்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை பிரதிவாதி தரப்பில் பிணை கோரப்பட்டது.
எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரினார்.
இதனையடுத்து முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் 9ம் திகதி வரை அப்துல் ராசிக்கை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.