மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி கரையோர பகுதிகளில் அடையாளம் தெரியாத பாம்புகளினால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
ஒரு அடி முதல் இரண்டரை அடி நீளமான பாம்புகளையே காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் இவ்வாறு பாம்பினங்கள் வந்திருக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ருக்ஷான் குரூப்பு தெரிவித்துள்ளார்.

