பண்டித் அமரதேவவிடம் சங்கீதம் கற்றேன் : பிரதமர்!



கொழும்பு றோயல் கல்லூரியில் தான் கல்வி கற்று வந்த காலத்தில் பண்டித் அமரதேவ தனக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டித் அமரதேவ அவர்களின் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தனக்கு சங்கீதத்தை கற்றுக்கொடுக்க அமரதேவ மேற்கொண்ட முயற்சியானது அவரது வாழ்வில் தோல்வியான சந்தர்ப்பம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு மாத்திரமல்லாது அனுர பண்டாரநாயக்க, தினேஷ் குணவர்தன ஆகியோருக்கும் அமரதேவ சங்கீதம் கற்றுக்கொடுத்தார்.
அமரதேவ நவீன தொழிற்நுட்பத்திற்கு அமைய முன்னோக்கி சென்றவர்.
யூடியூப் சமூக வலைத்தளத்தில் முன்னணியில் இருக்கும் பாடகர். அமரதேவ என்பவர் தேசிய சொத்து.
அவர் பேராற்றல் வாய்ந்தவர் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புகழாரம் சூட்டியுள்ளார்.