சமூக, சமய,கல்வி கலாசார துறைகளில் பல்வேறு பதவிகளில் பரிணமித்துவரும். களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கலாநிதி நாராயணபிள்ளை நாகேந்திரனுக்கு இலங்கை சமாதான கற்கை நிலையம் 'சமாதானத் தூதுவர் விருது' வழங்கிக் கௌரவித்துள்ளது.
இவ்விருதை அண்மையில்கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமா மண்டபத்தில்இலங்கை சமாதான கற்கை நிலையத்தின்நிறைவேற்று ப்பணிப்பாளா கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்த கொண்ட சுவிற்சலாந்தின் இலங்கை மற்றும் மாலை தீவிற்கான தூதுவர் கலாநிதி ஹெயின்ஸ் வோக்கா நெடாகோன் இவருக்கான விருதை வழங்கி வைத்தார்.
கலாநிதி நாகேந்திரன் சாமமீ வித்தியாசாகர்,சாமஸ்ரீ கலாநிதி,கல்வியில் மக்கள் சேவகள், குருபிரதீபாபிரபா, விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ளார். (களுவாஞ்சிகுடி) பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பிரதி அதிபராகக் கடமையாற்றும் இவர் அண்மையில் மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரத்தியேக கலாமன்றத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்..
