களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வீடு ஒன்று உடைக்கப்பட்டு பெருமளவான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் பின்பகுதி உடைக்கப்பட்டு உள் நுழைந்து 12 பவுன் தங்க நகைகளும், 72,000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரினால் முறையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் கணவனும் மனைவியும் வசித்து வந்த நிலையில், இருவரும் ஆசிரியர்கள் எனவும், வீட்டை பூட்டிவிட்டு பாடசாலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது, வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.