அக்கரைப்பற்று நீதிமன்ற நியாதிக்க மத்தியஸ்த,காதி நீதவான்களுடன் கருத்தாடல்



(சட்டத்தரணி தமிழினியன்)

அக்கரைப்பற்று நீதிமன்ற நியாதிக்க எல்லைக்குட்பட்ட மத்தியஸ்த சபை அங்கத்தவர்கள்,காதி நீதவான்களுக்கான விசேட செயலமர்வு,இன்று மாலை 2.30 அளவில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று,மாவட்ட நீதிபதியும்,நீதவானுவாமாகிய திருமதி.நளினி கந்தசாமி தலைமையில், நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கருத்தாடலை, அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

சம காலத்தில் மத்தியஸ்த சபைகள்,ஆற்ற வேண்டிய அளப்பரிய பணிகள் பற்றியும், பொது மக்களுடனான அதன் பொறுப்புக்கள் பற்றியும் இங்கு விவாதிக்கப்பட்டது.