நீராடச் சென்ற மாணவர் குழுவில் இரண்டு பேர் நீரில்



ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் (25) மாலை நீராடச் சென்ற மாணவர் குழுவில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் மேலும் ஒரு மாணவன் காப்பாற்றப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர – முதலாம் ஆண்டு கலை பிரிவில் கல்வி கற்கும் பர்ஹான் மற்றும் பங்குடாவெளி பகுதியை சேர்ந்த சிவா ஆகியோர் நீரில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளதுடன், அக்ரம் எனும் மாணவன் மயக்கமடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
காணாமல் போனோரை தேடும் பணியில் போலீசாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.