யாழ்.மாநகர சபை சுகாதாரத் தொழிலாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்குடா நாட்டிலுள்ள அனைத்து சுகாதாரத் தொழிலாளிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் எட்டாவது நாளாகவும், இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், யாழ்.குடாநாட்டிலுள்ள அனைத்து நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் சுகாதாரத் தொழிலாளிகளும் அவர்களுக்கு ஆதரவாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அமைய அடிப்படையில் பணியாற்றிவரும் 127 சுகாதாரத் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களின் கோரிக்கை தொடர்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை சாதகமாக அமையவில்லை என யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.

