தான் நேற்றைய தினம் கொழும்பில் இருந்திருக்கும் பட்சத்தில், விசேட தேவையுடைய ஒய்வூ பெற்ற இராணுவ உறுப்பினர்கள் மீது நீர் தாரை பிரயோகம் நடாத்த இடமளித்திருக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இறையடி எய்திய மாதுலுவாவே சோபித்த தேரரின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
தான் கொழும்பில் இருந்திருக்கும் பட்சத்தில் அனைவரையும் ஜனாதிபதி செயலகத்திற்குள் அழைத்திருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் வந்து செய்ய வேண்டியதை செய்யுமாறு தான் இடமளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் அறிந்த விதத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுப்படுத்த முடியாத பட்சத்திலேயே பொலிஸார் நீர் தாரை பிரயோகம்

