கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் வருடாந்த பரிசலிப்பு வைபவம் கல்லுாாியின் கபுர் கூட்ட மண்டபத்தில் கல்லுாாி அதிபா் சட்டத்தரணி ரிஸ்வி மரிக்காா் தலைமையில் (30) நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளா்ரும் மணித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவ பிரதம அதிதியாக கலந்து கொண்டாா். கௌரவ அதிதியாக கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளா் டப்ளியு. எம். ஜயந்த விக்கிரமநாயக்கவும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வில் சகலதுறைகளிலும் வெற்றியீட்டிய உயா்தர மாணவனுக்கு பேராசிரியா் புர்க்கான் ஞாபகாா்த்த தங்கப்பரிசும், வெற்றிக் கிண்னமும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கல்லுாாியின் ஆளுணா் சபைத் தலைவர் பௌசுல் ஹமீத் மற்றும் பிரதி அதிபா்களும் கலந்து சிறப்பித்தனா்.

