களுத்துறையில் ஜும்ஆ பள்ளிவாசல் மீது கல்வீச்சு!



களுத்துறை மஹா ஹீனட்டியங்கல ஜும்மா பள்ளிவாயல் மீது இன்று(26) அதிகாலை ஒரு மணியளவில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த பள்ளிவாசலின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.