அதிபர்களாக தெரிவாகியும் நியமிக்கப்படாதவர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
அதிபர் தரத்துக்கு கடந்த மே மாதம் 05ஆம் திகதி முதல் தெரிவாகியும் தாங்கள் ஆசிரியர்களாகவே கடமையாற்றுவதாகவும், அதிபர் தரத்திற்குறிய நியமனத்தை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது, கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர் தரத்திலுள்ள 336 பேருக்கும் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபானி தெரிவித்தார்.
இந்த ஆர்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருடன் சந்திப்பிலும் ஈடுபட்டார்.
இதன் போது, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இவ்விடயத்தை தெரிவித்தார்.

