துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ரத்ன பண்டா தசநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.
உதவிப் பொலிஸ் பரிசோதகர் தசநாயகவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் குருணாகலை மதுராகல இல்லத்துக்கு இன்று (18) பிற்பகல் சென்ற ஜனாதிபதி,அவர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவற்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு
குருணாகலையில் கொள்ளையரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த துணை காவற்துறை பரிசோதகரான தஸநாயக்க ரத்ன பண்டாரவிற்கு காவற்துறைமா அதிபரால் இன்று காவற்துறை பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நாகொல்ல – வந்துராக பிரதேசத்தில் அமைந்துள்ள உயிரிழந்துள்ள காவற்துறை அதிகாரியின் வீட்டுக்கு சென்ற காவற்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தர, அவரின் தேகத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் இந்த பதவி உயர்வு பதக்கம் அணிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி குருணாகலை – மாஸ்போத பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றின் உறுப்பினர்களை கைது செய்ய சென்ற வேளையில் இடம்பெற்ற துப்பாக்கித் தாக்குதலில் காவற்துறை அதிகாரி, ரத்ன பண்டார உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

