நாட்டின் சகல வளங்களையும் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளதாகவும், அவ்வாறு வளங்களை விற்பதாயின் இது அரசாங்கமே அல்லவெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் கார்த்திகை வீரர்கள் ஞாபகர்த்த தினம் இன்று (13) கொழும்பு விகார மகா தேவி புங்கா திறந்தவெளியில் கட்சித் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

