பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவை இன்று (05) பாராளுமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்பு தொடர்பில் கருத்தறிவதற்கே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரச்சினை தொடர்பில் கருத்தறிவதற்கு இன்று பொலிஸ் மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைப்பதாக பிரதமர் கடந்த பாராளுமன்ற உரையின் போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே கருத்துத் தெரிவிக்கையில்,
“குறித்த சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குவாக இருந்து விசாரணை நடாத்த தனக்கு அதிகாரம் இல்லையெனவும், பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் உள்ள அதிகாரிகள் தொடர்பில் மட்டுமே எனவும் அவர் கூறியுள்ளார்

