திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த கைதியின் சடலம் நேற்றிரவு 7.30 அளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பலகாமம், தெலுங்குநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரே சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக திருகோணமலை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த கைதியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கைதியின் மரணத்தில் சந்தேகமுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

