வர்தா புயல் இன்று கரையை கடப்பதையொட்டி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் அந்தந்த துணை கமிஷனர்கள் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் துணை கமிஷனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் சென்னை முழுவதும் 700 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். மொத்தம் 90 மீட்பு வாகனங்கள், 20 படகுகள் தற்போது ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சியில் இருந்து 5 தீயணைப்பு வண்டிகளில் 50 பேரும், கோவையில் இருந்து 5 தீயணைப்பு வண்டியில் இருந்து 50 பேரும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.