அட்டாளைச்சேனைக்கு ஆப்பு தேசியப் பட்டியலில்



(இப்றாஹிம் மன்சூர்)
மு.காவின் செயலாளர் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவுள்ளதான செய்திகள் பரவுகின்றன. ஹசனலிக்கே தேசியப்பட்டியல் வழங்கப்படவுள்ளதாக சில உறுதியான வட்டாரங்களிலிருந்தும் அறிய முடிகிறது. இதே நேரம் அமைச்சர் ஹக்கீமின் தேசியப்பட்டியல் மீது குறி வைத்து அட்டாளைச்சேனை மக்களும் காத்து நிற்கின்றனர். அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருதில் இடம்பெற்ற இளைஞர் மாநாட்டில் வைத்தும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்தார்.
நேற்று அதிர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் ஹக்கீம் கூறிய கருத்துக்களை அவதானிக்கின்ற போது அட்டாளைச்சேனைக்கு ஆப்பு என்பதும் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனை பல கோணங்களில் நிறுவலாம்.
 அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் பற்றி அமைச்சர் ஹக்கீமிடம் கேட்ட போது அவரது பதிலின் ஆரம்பம் சில மாவட்டங்கள் ஆசனமில்லாமலேயே தவித்துக் கொண்டிருக்கின்றன. சில மாவட்டங்களில் ஆசனங்கள் குவிந்து கிடக்கின்றன என ஆரம்பிக்கின்றார். இதன் மறு பொருள் ஆசனம் குவிந்து கிடக்கும் மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் வழங்க தேவையில்லை என்பதாகும்.
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் விட்டால் அவர்கள் தலைமையை எதிர்க்க வேண்டுமே தவிர கட்சிக்கு எதிராக செயற்படக்கூடாது எனக் கூறியிருந்தார். இதுவும் அமைச்சர் ஹக்கீம் தான் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் விடுகின்ற போது ஏற்படக் கூடிய பாதிப்பை எதிர்கொள்வதற்கான சிறந்த மூளைச் சலவையாகும். அமைச்ச்கார் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கும் எண்ணத்தில் இருந்தால் இப்படி கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமைச்சர ஹக்கீம் தேசியப்பட்டியலை வழங்க தயாராக இருந்ததாகவும் அதனை ஏற்க இருந்தவர் அமைச்சர் ஹக்கீமிடம் புதிய நிபந்தனைகளை இட்ட காரணத்தினால் அதனை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது எனக் கூறியிருந்தார்.
(இப்றாஹிம் மன்சூர்)
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சில பத்திரிகைகளில் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது ஹசனலிக்குத் தான் என்பதை அறிய அமைச்சர் ஹக்கீமிடம் நிபந்தனை போடும் துணிவுள்ளவர் யார் எனச் சிந்தித்தாலும் இலகுவான பதிலை பெற்றுக்கொள்ளலாம். அமைச்சர் ஹக்கீம் தனது 21வது நிகழ்வில் ஹசனலி தன்னிடம் சில நிபந்தனைகளை விதித்திருந்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகும் அட்டாளைச்சேனை மக்கள் அமைச்சர் ஹக்கீமின் வாக்குறுதியை நம்புவார்களாக இருந்தால் அவரகளை போன்ற ஏமாளிகள் யாரும் இருக்க முடியாது. மிக விரைவில் ஹசனலி பாராளுமன்றம் செல்லவுள்ளார்.
தற்போது அதனை வெளிப்படுத்துகின்ற போது அட்டாளைச்சேனை மக்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி தடுத்து விடலாம் என்ற நிலை உள்ளது. தற்போது அட்டாளைச்சேனையில் உள்ள முக்கிய புள்ளிகள் தேசியப்பட்டியலை தங்களது ஊரிற்கு பெறும் முயற்சிகளில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.