சுகயீனம் காரணமாக தியதலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தடகள வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க மேலதிக சிகிச்சைக்காக இன்று தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் சுசந்திகா ஜயசிங்க தியதலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தியில் அவர் தேசிய மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
இந்த தகவலை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் தற்போது 48 இலக்க வைத்திய விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார். சுசந்திக்காவுக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டதாக வைத்திய சாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

