மலேசிய நேரப்படி இன்று பிற்பகல் 2.10 அளவில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கோலாலம்பூர் நகரை சென்றடைந்தனர்.
மலேசியாவின் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
அந்நாட்டு அரசாங்கத்தின் விசேட அழைப்பிற்கு அமைய, ஜனாதிபதி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே ஜனாதிபதியின் இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் நோக்கமாகும்.
இரு நாடுகளினதும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கவுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியானமையை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

