வில்பத்து சரணாலயத்தை விரிவாக்கி பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு வலயமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது வனவிலங்கு திணைக்களத்திற்கு உரிமையில்லாத அதனை அண்டிய அனைத்து காணிப் பிரதேசங்களும் உள்ளடங்கும் வகையில் வனவிலங்கு பாதுகாப்பு வலயம் ஒன்றை அறிவித்து அதனை வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு இன்று (30) அறிவித்துள்ளார்.
அதேபோன்று, வில்பத்து உள்ளிட்ட அனைத்து வனாந்தரங்களையும் நவீன தொழினுட்பத்தை பயன்படுத்தி வானிலிருந்து எந்நேரமும் கண்காணிப்பதற்கு ஏற்றவகையி்ல் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களின் பிரதானிகளுடம் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எந்தவிதத்திலேனும் இடம்பெறும் வனாந்தர அழிப்புக்கு எதிராக தராதரம் பாராது சட்டத்தை பிரயோகிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் வன அழிப்பு தொடர்பாக பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை அறிக்கையிட்டு தமக்கு கையளிக்கும் வகையில் விசேட குழுவொன்றையும் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.