தமிழகத்தை தாக்கிய வர்தா சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
அதிசக்தி வாய்ந்த ‘வார்தா’ சூறாவளி நேற்று சென்னையை கடந்தததுடன் பாரிய சேதங்களை ஏற்படுத்தியது.
இதற்கமைய 1000 கோடி இந்திய ரூபாவுக்கு மேற்பட்ட அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதுடன் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
வர்தா சூறாவளி மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், அடுத்த சில மணித்தியாலங்களுக்கு சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை தொடரும் என எதிர்வு
கூறப்பட்டுள்ளது.
கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தின் விமான சேவைகள் இன்று முற்பகல் 5.45 அளவில் வழமைக்கு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வார்தா சூராவளியினால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் மின் கம்பங்கள் சரிந்துள்ளன.
இதனால் தடைப்பட்ட மின்சார விநியோகம் இன்று மாலைக்குள் வழமைக்கு திரும்புமென மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

