நாட்டின் சகல பாடசாலைகளிலும் இன்றும், நாளையும் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய பாடசாலை சூழல்களில் புகை விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் பொருட்டு 640 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

