காய்ச்சல் காரணமாக தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுசந்திகாவிற்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சுசந்திகாவின் குருதி தரத்தின் அளவு மிக வேகமாக குறைவடைந்து வருவதாகவும், அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

