அமைச்சுப் பத­வி­க­ளுக்­காக எத­னையும் செய்­வீர்கள்



கல­கொட அத்தே ஞான­சார தேரர் விவ­கா­ரத்தின் கார­ண­மாக நீதி­ய­மைச்சர் விஜேதாச ராஜபக் ஷவுக்கும் இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்­லா­ஹ்வுக்கும் இடையில் சபை யில் கடு­மை­யான வாக்குவாதம் ஏற்­பட்­டது.
அதன்­போது அமைச்சுப் பத­விக்­காக எத­னையும் செய்­வீர்கள் என ஹிஸ்­புல்­லாவை நோக்கி கூறிய நீதி அமைச்சர், எங்­களை நோக்கி தற்­போது கைகாட்ட வேண்டாம் எனவும் கடும் தொனியில் எச்­ச­ரித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை முஸ்லிம் விவ­காரம், தபால்­துறை அமைச்சின் செல­வின தலைப்­பி­லான குழு­நிலை விவா­தத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு எம்.பி.யோகேஸ்­வ­ரனின் உரையின் போது குறுக்­கிட்டுப் பேசிய அமைச்சர் விஜே­தா­ஸவின் உரையை அடுத்தே சர்ச்சை ஏற்­பட்­டது.
பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட வேண்டும் என்று யோகேஸ்­வரன் எம்.பி. வலி­யு­றுத்­தினார்.
இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ, சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் பிரச்­சினை இல்லை. எனினும் இத­னூ­டாக சிறிய சிறிய பிரச்­சி­னை­களை தோற்­று­விப்­ப­தனை விட பேச்சு மூலம் தீர்க்க முற்­ப­டு­கிறோம். இதனை மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்த விரும்­ப­வில்லை என்றார்.
இதன் போது எழுந்த இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லா பேசு­கையில், ஜனா­தி­ப­தி­யுடன் நடந்த சர்­வ­மத பேச்­சு­வார்த்­தையின் பின்னர் கூட, ஊடகவியலாளர் மாநாடு நடத்தி அல்­லாஹ்­வையும் முஸ்­லிம்­க­ளையும் இழி­வாக பேசி­யுள்ளார். தமது இறை­வனை தூற்­று­வ­தா­னது, முஸ்­லிம்­களை வேத­னைக்­குட்­ப­டுத்தும் செய­லாகும்.
எனினும் ஞான­சார தே­ரரை ஏன் இது­வரை கைது செய்­ய­வில்லை. இதற்கு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என கேள்வி எழுப்­பினார்.
இதன் போது கடும் சின­முற்று பேச ஆரம்­பித்த நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ, நல்­லாட்­சியில் இப்­படி பேசு­கி­றீர்கள். எனினும் அளுத்­கம சம்­ப­வத்தின் போது அன்­றுள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் ஒருவர் கூட எதிர்த்துப் பேச­வில்லை. நானும் கிரி­யெல்ல அமைச்­ச­ருமே சபையில் கடும் எதிர்ப்பு வெளி­யிட்டு பேசினோம்.
நீங்கள் அதன் போது வேறு எத­னையோ பேசி­னீர்கள். ஆனால், தற்­போது வாய்­கி­ழிய கத்­து­கி­றீர்கள். நீங்கள் அங்கம் வகித்த முன்­னைய ஆட்­சியின் போதே இந்த நிலைமை ஏற்­பட்­டது.
பாது­காப்பு செய­லாளர், மஹிந்த ராஜபக்ஷ எம்மை பாது­காப்­பார்கள் என எண்­ணி­னீர்கள். அமைச்சு பத­வியும் வரப்­பி­ர­சா­தங்­களும் பெறு­வ­தற்­காக நீங்கள் எதனை வேண்­டு­மா­னாலும் செய்­வீர்கள். மக்கள் மீது அக்­கறை இல்­லா­த­வர்கள் நீங்கள்.
இன­மு­றுகல் நிலை­மையை நினைத்­த­வுடன் தீர்க்க முடி­யாது. எமக்கு கால அவ­காசம் வேண்டும். எனக்கும் சமூக வலை தளங்­களில் முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் கடு­மை­யாக விமர்­சிக்­கின்­றனர். மிகவும் கேவ­ல­மான செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.
காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான சமூ­கத்தை நீங்­களே உரு­வாக்­கி­யுள்­ளீர்கள். அவர்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்­தவே நாம் முனை­கிறோம். வீண்­வாதம் வேண்டாம். இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுக்க வேண்டாம். வரப்­பி­ர­சா­தங்­களை பெறவே நீங்கள் சரி.
இதன்­போது இரு­வரும் சர­மா­ரி­யாக விவா­தித்துக் கொண்­டனர்.
தொடர்ந்தும் ஞான­சார தேரரின் அடாவடித்தனம் அதிகரிக்கிறது. இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வினவினார்.
இதற்கு உடன் நடவடிக்கை எடுக்க முடியாது. காலம் தேவை. அமைச்சு பதவிகளுக்காக ஏன் இப்படி செயற்படுகிறீர்கள் என நீதி­ய­மைச்சர் குறிப்­பிட்­டார்.