அக்கரைப்பற்றில் டெங்குக் கட்டுப்பாட்டில் கவன மெடுக்க வேண்டிய பகுதிகள்.




அக்கரைப்பற்று HNB இற்கு அருகில் உள்ள வடிகானில் துவங்கி பொலிஸ் நிலையத்தின் பின்புறமாக வந்து சேரும் பகுதி, அஸ்ஸிராஜ் மகா வித்தியாலய பின்புறமாகவுள்ள வடிகான்களும், சுரட்டைகளாலும், வெற்றுப் போத்தல்களாலும், நிரம்பி வழிகின்றது.
மாநகர சுகாதாரப் பிரிவின் அசமந்தப் போக்கினால், சுத்திகரிக்கப்படாமல் உள்ள, வடிகான்கள் பற்றி, கடந்து வெள்ளியன்று, சிலோன்24 இணையம்,மாகாண சுகதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியது. பிராந்திய சுகாதார அதிகாரியிடம் இது பற்றி எடுத்தியம்புவதாக அவர் தெரிவித்தார்.
இதேவைள, மாநகர ஆணையர் தனக்கு கீழுள்ள சுகாதார அதிகாரியின் துணைகொண்டு தமக்குக் கீழுள்ள அதிகாரிகளைப் பயன்படுத்தி  மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் எவ் வித நடவடிக்கை எடுக்கவும் இல்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் #ceylon24 
சுட்டி நிற்கின்றது.

இதே வேளை,அக்கரைப்பற்று மாநகர சபையின் எல்லைக்குள் 04 டெங்கு நோயாளர்கள் 
1.அக்கரைப்பற்று - 6 இல் 02 பேரும், 
2.அக்கரைப்பற்று - 3 இல் 01 பேரும், 
3.அக்கரைப்பற்று - 1 இல் 01 பேரும் தற்போது இனம் காணப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியன ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பயனாக அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் க.பொ.த(சா/த) பரீட்சை நிலையங்கள் அமையப் பெற்ற பாடசாலைகளுக்குள்ளும், அதன் சுற்றுப்புறச் சூழல்களிலும் 02 நாட்கள் டெங்கு நோய்த் தடுப்பிற்கான புகை அடித்தல் நடவடிக்கை இடம் பெற்றது. அனைத் தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்கள் புகை அடித்தல் நடவடிக்கை இடம் பெற்றது.
குறிப்பாக 2016.12.15 ஆந் திகதி வியாழக் கிழமை பிற்பகல் வேளையில் அக்கரைப்பற்று - 21 ஆம் பிரிவில் டெங்கு நோய்த் தடுப்பிற்கான புகை அடிக்கும் நடவடிக்கை இடம் பெற்றது. அந்நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தைச் சேர்ந்த சுகாதாரப் பரிசோதகர்கள் பலரும் ஒன்றிணைந்து நேரடியாக களத்தில் செயற்பட்டனர். அதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அவர்களின் மேலான நன்றியினையும் தெரிவிக்கின்றனர்.