திருகோணமலை கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதானப் பணியொன்றினை எதிர்வரும் சனிக்கிழமை(31) மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் கூறுகையில்,
2017 ஆம் ஆண்டுக்கான "பாடசாலையை சுத்தம் செய்து பிள்ளைகளுக்கு ஒப்படைத்தல்" எனும் தொனிப் பொருளில் இந்தப் பணி இடம்பெற உள்ளது.
பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்சிரமதானப் பணியில் கிண்ணியா நகர சபை, விளையாட்டுக் கழகங்கள், கிராம முன்னேற்ற சங்கங்கங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் எனத் தெரிவித்தார்.

