குறுமண்வெளியில் தோணி கவிழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.




மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுமண்வெளியில் தோணி கவிழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று பிற்பகல் குறுமண்வெளி - மண்டூர் வாவியில் மீன்பிடிக்கச் சென்றவரின் தோணியின் தடுப்பு கம்பு உடைந்து தோணி கவிழ்ந்துள்ளது. 

இதன்போது வாவியில் வீழ்ந்தவரை காணாத நிலையில் அங்கிருந்த மீனவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை இரவு சடலம் வாவியில் இருந்து மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இதேவேளை, சம்பவத்தில் குறுமண்வெளியை சேர்ந்த விரசிங்கம் சதீஸ் (24வயது) என்ற இளைஞனே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.