அக்கரைப்பற்று-02 இல் வசித்து வந்த பட்டினப்பள்ளிவாயல் முன்னாள் நம்பிக்கையாளருள் ஒருவரான "சஹிதுக்காக்கா " இன்று மாலை அஸர் தொழுகையினை முடித்து விட்டு வீடுவந்து சேர்ந்து, சில மணித் துளிக்குள் காலமானார்.
இவர் பற்றிய பதிவுகளைத் தருகின்றார் முகநுால் நண்பர் றியாத் மொஹிடின்.
ஒவ்வொரு மனிதர்களையும் கானும் போது ஏதாவதொருவிடயம் எங்கள் எண்ணங்களை வருடிச்செல்லும்
மரியாதைக்குரிய
"சஹிதுக்காக்கா "
எனது 7வயதில் என்னை ஆச்சரியப்படவைத்தமனிதர்
எனது தந்தையிடமிருந்த இந்த போட்டோக்களை அவரிடம் காண்பிக்கவேண்டுமென நினைத்தும் முடியாமல் போய்விட்டது
ஊருக்காக
பொதுசேவையில்
எப்போதும் தன்னை அர்பணித்தவர் நேற்று ஏன் இன்று வரை நம் அருகில் நின்று தொழுதவர்
பள்ளியோடு தன்னை எப்போதும் இணைத்துக்கொண்டவர்
அவருடைய வயதைக்கேட்டவரின் கண்பட்டதோ தெரியாது
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ்தஆலா அவருடைய கப்ரை சுவனத்தின் பூஞ்சோலையாக்கிவைப்பானாக ஆமீன்

