-சிவம்-
நாடெங்கிலும் இன்று (06) முதல் தடை தாண்டும் முயற்சியான க.பொ.த. சாதாரண தாப் பரீட்சை ஆரம்பமாகிய நிலையில் மட்டக்களப்பில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்பாக மாதா, பிதா, குரு மற்றும் தெய்வங்களிடம் வேண்டுதல் செய்து அவர்களின் ஆசீர்வாதங்கள் பெற்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் படி புதிய பாடத்திட்டத்தில் 84 நிலையங்களும் பழைய பாடத்திட்டத்தில் 102 நிலையங்களிலுமாக 186 நிலையங்களும் மற்றும் 14 இணைப்பு நிலையங்களும் இயங்குவதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் தெரிவித்தார்.
புதிய பாடத்திட்டத்தில் 8536 பாடசாலை பரீட்சார்த்திகளும் 2359 பிரத்தியேக பரீட்சாத்திகளும் தோற்றுவதோடு பழைய பாடத்திட்டத்தில் 1507 பாடசாலை பரீட்சார்த்திகளும் 14172 பிரத்தியேக பரீட்சாத்திகளுமாக மொத்தம் 26,574 பேர் தோற்றுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.