தஜிகிஸ்தான் இலங்கையிடம் நிறைய கற்ற வேண்டியுள்ளது!



வர்த்தகத் துறையை அபிவிருத்தி செய்ய தஜிகிஸ்தான் இலங்கையிடம் கற்க வேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளதாக, அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இருநாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தி, தொழிநுட்ப பரிமாற்றம், இளைஞர் அபிவிருத்தி போன்ற துறைகளில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இதன்போது, இமோமாலி ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

நேற்றைய தினம் இலங்கைக்கு வந்த தஜிகிஸ்தான் ஜனாதிபதியை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.