நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திரு.ஆர்.சிவலிங்கம் தலைமையில் 04.12.2016 அன்று கொட்டகலை ரிஷிகேஷ் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், நுவரெலியா கல்வி பணிப்பாளர் எம்.ஜி.பியதாஸ, பிரிடோ நிறுவன திட்ட இயக்குனர் எஸ்.கே.சந்திரசேகரன் மற்றும் இப்பிரதேச பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
இதன் போது மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இவ்வருடம் பாடசாலையில் நடைப்பெற்ற பாடவிதமான போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

