துருக்கி தலைநகர் இஸ்தான்புல் இரவு களியாட்ட விடுதியில் 39 பேரை சுட்டுக் கொன்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
துருக்கி தலைநகரான இஸ்தான்புல் உள்ள பிரபல இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.
ஜனவரி முதலாம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் குறித்த இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்
இந்த துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் உயிரிழந்துடன், 70 இற்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்தான்புல் இரவு விடுதியில் 39 பேரை சுட்டுக் கொன்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கி-ஐரோப்பா எல்லைப் பகுதியான எஸென்யூர்ட் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனது 4 வயது மகனுடன் பதுங்கி இருந்த அபு முஹம்மது ஹொராசானி என்பவரை பொலிஸார் நேற்று கைது செய்ததாகவும், கைதான நபர் உஸ்பெகிஸ்தான் நாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவன் என்றும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

