5 பொலிஸார் உட்பட அறுவருக்கு மரண தண்டனை



பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவருக்கும் பதுளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 

பதுளை பொலிஸ் நிலையத்தில் வைத்து கைதி ஒருவர் மரணித்த சம்பவம் தொடர்பில் இவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டமையை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2014ம் ஆண்டு பதுளை - கந்தெகெடிய பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஒருவரே இவ்வாறு சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார். 

இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த அறுவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர். 

இதற்கமைய நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.