74-வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு



கலிபோர்னியா: 
'லா லா லேண்ட்' என்ற ஹாலிவுட் திரைப்படம் 7 பிரிவுகளில் கோல்டன் குளோப் புதிய சாதனை படைத்துள்ளது. 74-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான விருது 'லா லா லேண்ட்' ஹாலிவுட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இந்த படத்தை இயக்கிய டாமியன் சாஸலுக்கு சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் ஆகிய விருதுகள் கிடைத்துள்ளன. 

'லா லா லேண்ட்' படத்தின் கதாநாயகன் ரியன் காஸ்லிங் சிறந்த நடிகருக்கான விருதையும், கதாநாயகி எம்மா ஸ்டோன் சிறந்த நடிக்கைக்கான விருதையும் வென்றனர். சிறந்த பின்னணி இசைக்கான விருது லா லா லேண்ட் படத்தின் இசையமைப்பாளர் ஐஸ்டின் ஹர்விட்ச் வழங்கப்பட்டது. சிறந்த பாடலுக்கான விருது என மொத்தம் 7 விருதுகளை வென்று லா லா லேண்ட் திரைப்படம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மற்ற பிரிவுகளில் சிறந்த படத்திற்கான விருது மூன்லைட் படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த வேற்று மொழி படமாக பிரான்சின் எல்லைய் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.