கைதிகளுக்கு விசேட மன்னிப்பு



சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 285 பேருக்கு இன்று விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.