நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மலையகத்தின் பல ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் பிரபல்யமான சுற்றுலாத்தளமாக விளங்கும் அம்பேவெல பகுதியில் காணப்படும் கந்தஎல நீர்த்தேக்கம் நிலவும் கடும் வரட்சியால் நீர்வற்றி காணப்படுகின்றது.
அம்பேவெல பண்ணையை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த நீர்த்தேக்கத்தை பார்வையிட தவறுவதில்லை அத்துடன் இங்கு படகு சவாரியும் மெற்கொள்வர் .
வரட்சியினால் நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி காணப்படுவதால் படகு சவாரியும் நடைபெறுவதில்லை என படகுகளை இயக்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் குறைவடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
லிந்துலை மெராயா பிரதேசத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஆறுகளில் நீர் குறைவடைந்து வருவதாகவும் இதனால் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

