கசிவு



கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இன்று காலை இவ்வாறு எரிபொருள் எடுத்துச் செல்லப்படும் நான்கு குழாய்களில் ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளதாக, பெற்றோலிய அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும், நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், கடலில் எண்ணெய் கலப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.