நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற மூன்று பேரில் ஒருவர் நச்சு வாயுவினால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட மற்றைய இருவரும் நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று பேரும் நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

