கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மின் கம்பத்துடன் மோதி இன்று (19) அதிகாலை (19) 4.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
குறித்த வேன் கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்த போது 93ம் கட்டைப்பகுதியில் மின் கம்பத்துடன் மோதியுள்ளதாகவும் கன்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, சின்னக்கிண்ணியா பகுதியைச்சேரந்த முனீர் அஸ்ரி அஹமட் (07வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த 07 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை கன்தளாய் தலைமைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

