கட்டார் நாட்டுக்கான புதிய இலங்கைத் தூதுவராக வர்த்தகர் எ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எ.எஸ்.பி.லியனகே இதற்கு முன்னர் நைஜீரியாவுக்கான இலங்கைத் தூதுவராக ஒரு வருடம் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
