பாலமுனையின் முதல் பெண் சட்டத்தரணி




அட்பாடாளைச்சேனை பாலமுனையின் முதல் பெண் சட்டத்தரணியான திருமதி எம்.வை.றிஸமிஅஸாம் அவர்கள் இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் பாலமுனை நான்காம் பிரிவில் யூ.எல். முஹம்மது எஹியா ( மீராஸாஹிப் ) மற்றும் ஏ.பி. ஹனீதா தம்பதம்பதியினருக்கு 1990.03.29 அன்று பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் தொடங்கி உயர்தரத்தையும் கலைப்பிரிவில் அப்பாடசாலையிலேயே கற்றார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே 2012ம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை சட்டக்கல்லூரிக்கான அனுமதித் தேர்வில் சித்தியடைந்து 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் தனது சட்டக் கல்வியை நிறைவு செய்து ( Attorney at Law ) தற்போது பாலமுனையின் முதல் பெண் சட்டத்தரணியாக என்ற பெருமை அடைந்துள்ளார்.