(மொஹமட் அஸ்லி)
இரவு முதல் பெய்து வரும் அடை மழையால் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,பாலமுனை அதனை அண்டிய பிரதேசங்களிலும் அடை மழை பொழிகின்றது.
அக்கரைப்பற்றின் முறாவோடை, பதுர் நகரின் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.அட்டாளைச்சேனை, பாலமுனைக் கிராமங்களில் கரையோரங்களிலும் வீடுகளில் வெள்ளம் பாய்ந்தள்ளது.
தொடர் மழையினால்,மாணவர்களின் வரவு குறைவடைந்து காணப்பட்டது.பாடசாலைகள் இயங்கவில்லை.அலுவலங்களிலும் அரச ஊழியர்கள் வரவும் குறைவாகவே காணப்பட்டுள்ளது.

