திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இறால்குளி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் ரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிண்ணியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் மூதூரிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியுள்ளது.
இதன் போது, முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த 37 வயதுடைய வைத்தியநாதன் திருமாறன் என்பவர் உயிரிளந்துள்ளார்.
மூதூரைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தையடுத்து குறித்த வாகனம் மூதூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

