கிண்ணியா வலய கஸ்டப்பிரதேச பாடசாலையான வான் எல ஆயலியடி பாடசாலையில் 550 மேற்பட்ட பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர் இப்பாடசாலையில் GCE (A/L) வரையான வகுப்புகள் இருப்பதுடன் 22 பிரிவுகள் இருக்கின்றன. பாடசாலை ஆளணி பற்றாக்குறை,பெளதீக வளப்பற்றாக்குறை ஏராளமாக காணப்படுகிறது.
கடந்த காலங்களில் அப்பாடசாலையில் சுமார் 32ஆசிரியர்கள் இருந்த போதும் தற்போது அப்பாடசாலையில் 16 ஆசிரியர்கள் மாத்திரம் இருப்பதாக ஆயலியடி பொதுமக்கள் தெரிவித்தனர் இது பாடசாலை அபிவிருத்தியில் பாரிய தாக்கம் விளைவிப்பதுடன் இது சம்மந்தமாக எந்த அரசியல் தலமையும் கவணமெடுப்பதாக தெரியவில்லை இதனால் இப்பாடசாலையின் முன்னேற்றம் கருதி எதிர் வரும் நாட்களில் பகிஷ்கரிப்புகளை ஆயலியடி மக்களால் நடத்தப்படவுள்ளதாக அறியக்கிடைத்தது.
நகர்புற பாடசாலைகளின் அபிவிருத்தியில் கவணம் செலுத்தும் அரசியல் தலமைகள் கிராமபுற பாடசாலைகளில் கவணயீனமாக செயற்படுவது வருத்தமளிப்பதுடன் எதிர்வரும் காலங்களில் வான்எல புஹாரி மகா வித்தியாலயம் பாடசாலை அபிவிருத்தி குழுவுடன் அரசியல் தலமைகள் ஒன்றிணைந்து பாடசாலை அபிவிருத்திக்கு ஆக்கவூர்வமான பங்களிப்பை செய்வது காலத்தின் தேவை. என பெற்றார்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

