2016 – 2017 ஆம் கல்வி ஆண்டுக்காக பல்கலைகழகங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேடுகள் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புத்தக விற்பனை நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோபூர்வ இணையத்தளத்திலும் அதனை பெற்றுக் கொள்ளமுடியும்.
இந்த கையேடு தொடர்பில் ஆசிரியர்களை தெளிவூட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

