டொனால்ட் டிர்ம்பும் அவருடைய மனைவியும் அதிபர் பாராக் ஒபாமா மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமாவோடு காலை உணவுக்காக வெள்ளை மாளிகையை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் அவர்கள், அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பதவியேற்று ஏற்புரையை வழங்க இருக்கின்ற கேபிட்டல் கட்டடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுவார்கள்.
டிரம்பின் குடும்பத்தினர், இந்த பதவியேற்பு நாளை அருகிலுள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற பாரம்பரிய செப வழிபாட்டோடு தொடங்கியுள்ளார்.
பலத்த பாதுகாப்புடன் நடைபெற இருக்கும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரப்பத காலநிலைக்கு தக்கவாறு ஆடை அணிந்தவராக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும், எதிர்க்கட்சியினரும் வாஷிங்டன் நோக்கி பயணித்து வருகின்றனர்.
முன்னதாக, தன்னுடைய அலுவலகமான ஓவல் மாளிகையை விட்டு கடைசியாக வெளியேறுவதற்கு முன்னால், பராக் ஒபாமா வழக்கப்படி, தனக்கு பின் வரும் அதிபருக்கு தனிப்பட்ட குறிப்பை எழுதிவைத்துள்ளார்..

