ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்றால் பிரியாணிக்கு தடையா உள்ளது என நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
இந்தியா டுடேயின் இரண்டு நாள் ஊடக மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்துரையாடிய கமல்ஹாசன், திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும், சினிமாவில் நீண்ட காலம் நீடிப்பது என்பது சலாவான ஒன்று என்றும் கூறினார்.
விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை என்று கூறிய கமல்ஹாசன், என்னை நோக்கி கூறப்படும் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றார்.
தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை போட்டியாகத்தான் கருத வேண்டும் என்று தெரிவித்த அவர், ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை கிடையாது; ஏறுதழுவுதல் என்பதில் இருந்து உருவானது என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்றால் பிரியாணிக்கு தடையா உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்

