ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் நடைபெற்ற இலங்கை சீன கைத்தொழில் செயற்றிட்ட அங்குராற்பண நிகழ்வில் இரு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முறுகல் நிலை பின்னர் கைக்கலப்பாக வலுவடைந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகமும் நீர்தாரை பிரயோகமும் மேற்கொள்ளப்படுள்ளது.
இதன்போது சிலர் யமடைந்துள்ளதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

